ஆலன் பள்ளியிலிருந்து ஒரு நாள் மகிழ்வுலா ஏற்பாடு செய்திருந்தனர். ஆலன் மிகுந்த மகிழ்ச்சியுடன் தயாரானான். அம்மா செய்து கொடுத்த ஆலூப் பராத்தா, வாழைப்பழம் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் கிளம்பி விட்டான். அவர்கள் சென்றது ஒரு பூங்கா. பல வண்ண மலர்களையும் செடி கொடிகளையும் பார்த்துக் களித்தனர். செடிகளை மயில், யானை போலவெல்லாம் வடிவாய் வெட்டி அழகு செய்திருந்தனர். அதைப் பார்த்து வியந்து மகிழ்ந்தனர் குழந்தைகள். பிறகு சாப்பிடும் நேரம் வந்தபொழுது ஆசிரியர் குழந்தைகளை புல்வெளியில் வட்டமாக அமரச்செய்தார். ஆலனும் அமர்ந்து தன்னுடைய சாப்பாட்டை எடுத்தான். அப்பொழுது அருகிலிருந்த மரத்தின் பின்னிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனைப் பார்த்தான். அவன் பசியோடு அனைவரது சாப்பாட்டையும் பார்த்துக் கொண்டிருந்தான். ஆலன் ஆசிரியரிடம் சென்று, "அறம் செய்ய விரும்புன்னு படித்தோமே, அவனை கூப்பிடட்டுமா?" என்று கேட்டான். ஆசிரியரும் பெருமையுடன் அனுமதி கொடுத்தார். ஆலன் அந்தச் சிறுவனை அழைத்தான். பயந்து கொண்டே வந்த அந்த சிறுவனையும் அமரச் செய்து பாதி பராத்தாவும், பாதி பழமும் கொடுத்தான். பள்ளியில் புரியாமலிருந்த சில பிள்ளைகளும் "ஒ இதுதான் அறம் செய்ய விரும்புரதா?" அப்படின்னு புரிந்து கொண்டார்கள். பிறகு அனைவரும் புல்வெளியில் விளையாடி விட்டு கிளம்பினர். மகிழ்வுலா மிகுந்த மகிழ்ச்சியுடன் பயனுள்ளதாகவும் அமைந்தது.
oh.. started in tamil. Great Grace.
ReplyDeleteInspired by you Dhiyana :-)
ReplyDeleteசுருங்க சொல்லி,'அறம் செய்ய விரும்பு' என்ற ஆத்திச்சூடி கூற்றை சிறப்பாக விளக்கி இருக்கிறிங்க கிரேஸ். சிறு வயதில் தினதந்தியில் படித்த சிறுவர் மலர் கதைகள் ஞாபகத்திற்கு வருகின்றன!!.
ReplyDeleteஅப்புறம் இந்த கதையை விரைவில் ஹேனி நிஜமாக்குவான் என்பதில் எனக்கு எந்த ஐயப்பாடுமில்லை :-).