பலதிங்கள் காணாத என்னுயிர் தோழி வருகிறாள்
அளவளாவ வாசல் செல்லவில்லை நான்!
கன்னல் சாறும் வெல்லப் பாகும் வேண்டுமா என்றாள்
மனையில் நுழைவதற்கு முன்பே, வேண்டாம் என்றேன் !
தித்திக்கும் தேனும் முக்கனியும் வேண்டுமா என்றாள்
மறுத்தே உரைத்தேன் ஒரே சொல்!
ஏதேனும் எடுத்துக்கொள், எல்லாம் மறுத்தால் எப்படி என்றாள் !
"எதுவும் மறுக்கவில்லை, அனைத்தும் வெகுத்தம் உண்கிறேன்" என்றேன்
அனைத்தும் உண்கிறாயா?, என்றே உள்ளே வந்தனள்
"மெய்யுரைத்தாய்! தொந்திரவு செய்யவில்லை!" என்றே சென்றாள் !
கண்ணே! உன்னை நெஞ்சோடு அணைத்து உச்சிமுகர்ந்து
கண்மூடி அமர்ந்திருந்த என் இன்பநிலை கண்ட என் தோழி!
குழந்தையை அணைத்து பூரித்திருந்த தாய் தோழியைக் காண மான்போல் துள்ளி ஓடவில்லை, இனிப்பாய் எல்லாம் உண்கிறேன் என்கிறாள். அவ்வளவு இனிமையாது தாய்மையின் பூரிப்பு, நிறைவானது குழந்தை தரும் மகிழ்ச்சி!.
புது சொல்:
வெகுத்தம் - நிறைவாய், மிகுதி
My dearest friend whom I haven't seen for months comes home
I did not run outside to chat with her
"Do you want sugarcane juice and jaggery?"
She called out from outside, before entering
I said, "No"!
"Do you want delicious honey and 'mango,banana and jackfruit'?"
I said the same one word, No.
"Please accept something, why do you reject everything? "She asked.
I said, "Am not rejecting anything, but having all in abundance"
Asking "Having everything in abundance?", she entered inside
"You said the truth, am not disturbing you" Saying this she went out!
"My dear! She had seen me holding you close to my heart
With eyes closed and my face on your head!"
Note:
mango,banana and jackfruit is called mukkani in Tamil and I have used that word in the Tamil poem.
I tried translating it for my non-Tamil speaking friends, but I think it doesn't do total justification to the feeling which I had described in Tamil.