MyMenu1

Thursday, August 18, 2011

அருள் தாரும்

கடவுளை நினைத்து நான் எழுதியது ...in March 2007

பல்லவி:
அருள் தாரும் அருள் தாரும்
உம் வழி நடக்க அருள் தாரும்
அருள் தாரும் அருள் தாரும்
உம்முடன் நடக்க அருள் தாரும்

1. பள்ளமோ முள்ளோ என்று அய்யுறாமல்
    காடோ மேடோ  என்று கலங்காமல்
    உம் வழி நடக்க உறுதி கொண்டு
    உம்முடன் நடக்க அருள் தாரும்

2. இருளோ ஒளியோ என்று நினையாமல்
   திருப்பம் வருமோ என்று அஞ்சிடாமல்
  என்னை முழுவதும் உம்மிடம் கொடுத்து
  உம்முடன் நடக்க அருள் தாரும்

என்னோடினைந்த இறைவா

2007 மார்ச்சில் எழுதியது ...

பல்லவி:
என்னோடினைந்த இறைவா நன்றி
என்னுள்ளம் எழுந்திட்ட  தலைவா நன்றி

1. காலையில் தோன்றும் கதிரவனாய்
    மாலையில் வீசும் தென்றலாய்
   இரவில் ஒளிரும் விண்மீனாய்
   என்னோடினைந்த இறைவா நன்றி

2. சுவாசத்தில் கலந்த காற்றாய்
    என்னுள் ஓடும் உதிரமாய்
    என்னுள் துடிக்கும் இதயமாய்
    என்னோடினைந்த இறைவா நன்றி

Wednesday, August 17, 2011

என் முதல் கவிதை

பதினோராம் வகுப்பு படிக்கும் பொழுது நான் எழுதிய கவிதை (!?) இது. எனக்கு தெரிந்தவரை தமிழில் அதுதான் என்னுடைய முதல்  முயற்சி என்று நினைக்கிறேன்.

வானச் சீலையில் நட்சத்திர ஓட்டைகள்
பூமியின் வறுமை விண்ணையும் தாக்கி விட்டதோ?

வானத்தின் வளமான நட்சத்திரங்களை வறுமையாக ஏன் கற்பனை செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. :-)

Tuesday, August 16, 2011

My Love, My Soul

My Love, sweet heart, my life, how do I address you?
I would be wrong if I say you are my heart,
for one day it will stop beating!
I would be wrong if I say you are my blood,
for it flows not to my nails!
I would be wrong if I say you are my breath,
for I do exhale leaving it out!
I would be wrong if I say you are my life,
for its not always sweet as you!
I would say you are my soul not parted in death,
for am yours and you mine eternally!
I had written this poem in 2006 and it got published in a book (in US) too.. :-). I have that book with me.

என் அன்பு தாலாட்டு

என்னுடைய முதல் மகன் பிறந்த பொழுது (nov 2004 ), வீடு சென்றதிலிருந்து நிறைய பாட்டு பாடுவேன். நிறைய அவனுடன் பேசுவேன். அப்பொழுது நானாக, என் சொந்த வார்த்தைகளால் தமிழில் அவனை கொஞ்சி பாடிய தாலாட்டுப் பாடலை இங்கே பதிவு செய்கிறேன். எண்ணற்ற முறை பாடி அவனுக்கே இப்பாடல் நன்றாக தெரியும். 
பிறகு என் இரண்டாவது மகனுக்கும் இதைப் பாடியிருக்கிறேன், பெயரை மட்டும் மாற்றி... :-)
ஆழ் கடல் முத்தே
நீல் வான நிலவே
சோலை மலர் மணமே
மலைத்தேன் சுவையே
கானமயில் நடமே
கூவும் குயில் இசையே
வீசும் தென்றல் காற்றே
என் இதய துடிப்பே
என் செல்ல மகனே ....Haaaanikuttyyy .... :-)
இதைப் பாடினால் Hani முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியையும் அவன் கண்களில் தெரியும் பிரகாசிப்பையும் பார்க்க அவ்வளவு இனிமையாய் இருக்கும். :-)


Sunday, August 14, 2011

Independence Day

Wishing Happy Independence Day, whether or not feeling inside the heart;
Whether or not understanding the true meaning of it;
Its high time, we realize our part, instead of looking around for pits; Just a few simple things will make a wonderful India -
1.Respect traffic signals, even if tens around us don't; Make a difference!
2.Do not just throw trash onto the roads making sure its out of our car or house, it ends up on the land, OUR country!
3.Do not take the monuments for granted-lets do our small part to preserve them. Instead of just talking about great kings and scholars of India, understand their cause and what they foresaw, in the depth of our mind. I think that understanding and feeling itself will make us do what we have to do!
Pass on stories about the heritage of ancient India, about  pre-independence and what it took to gain freedom, to the younger generation! Its our responsibility to enlighten our children and make them feel proud, and make them feel responsible!
A lot more could be added, I could write a big essay....let each of us think about that...Am tired of people saying Happy Independence Day, watching movie, eating popcorn, leaving the trash on the seat; Am tired of people saying Happy Independence Day, but could not wait in signal for a few minutes, or do not follow the lanes; Am tired of many more things....Am not wishing Happy Independence day...I wish every citizen of India understands what it is to be a free Nation, and what it takes to be a good citizen! God Bless India and all Indians!!

Wednesday, August 10, 2011

To go sailing

I've got a sudden whim to go sailing. Yes, this thought blossomed in my mind out of the blue. I wonder how it would be to go far away from the land. Swayed by the waves, hope that to be gentle rather than a storm.I would like to gaze at the horizon for endless hours, may be see a whale or shark. Well, am feeling like writing a poem now...Let me do..

I've got a sudden whim
To go sailing;
Yes, Surely out of the blue
This thought blossomed;
Swayed gently by the waves
Gazing the horizon;

Immersed in the sparkling luster
Caressed by breeze;
Listening to sounds of ocean
Luxuriously happily relaxed;

I imagined myself in the sea, living each of this line and now am absolutely calm!! :-) Wow, Awesome!! (patting myself)