MyMenu1

Monday, May 21, 2012

மழையின் இன்பம்

கருங்கொண்டல் கண்டு ஓடி ஒளிவதா
கானமயில் போல ஆடிக் களிப்பதா;
வெள்ளித்துளி வீழ்வது கண்டு குடை விரிப்பதா
இலையைப்போல் பூவைப்போல் லயித்து சிலிர்ப்பதா;
இத்தயக்கங்கள் விலக்கி மழைநீர் முகத்தில் ஏந்தி
வதனம் பூவாய் மலர உள்ளம் சிலிர்த்து
மனச்சிறகை விரித்து துள்ளி ஆடுவதல்லவா
இன்பம், மட்டற்ற இன்பம்!

Saturday, May 19, 2012

என் தமிழே, கண்ணுறங்கு!

அன்பே அமுதே முத்தே மாணிக்கமே 
இரத்தினங்கள் பல உண்டு, என் வைரமே!
ஒவ்வொன்றாக சொல்லிக் கொஞ்ச ஆசையுண்டு 
நேரமில்லை, நடவுக்கு போகவேண்டும்
அதனால் என் தங்கத் தமிழே! நீ கண்ணுறங்கு!


Was in draft for a while...